​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்பிள் நிறுவன காலாண்டு வருவாய் கணிசமாக அதிகரிப்பு - ரூ.6.65 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டம்

ஆப்பிள் நிறுவன காலாண்டு வருவாய் கணிசமாக அதிகரிப்பு - ரூ.6.65 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டம்

கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்திய மதிப்பில் 6.65 லட்சம் கோடி ரூபாயை (($100 billion)) பங்கு சந்தைகளில் அந்நிறுவனம் முதலீடு முடிவு செய்யவுள்ளது. கடந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், 25.3 சதவீதம்...

Whatsapp நிறுவனர் Facebook-ல் இருந்து விலக திட்டம்

வாட்ஸ் அப் நிறுவனரான ஜான் கோம் ((Jan koum)) ஃபேஸ்புக் நிறுவன இயக்குநர் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜான்கோம் கடந்த 2014-ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை...

நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்காவது வளர்ச்சியடையும்

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்காவது வளர்ச்சியடையும் என நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். பொருளாதாரச் சூழல் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கைதரும் வகையிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் முதலீட்டு சுழற்சி வளர்ச்சியை நோக்கியிருப்பதாகவும்...

ஐடியா செல்லுலர் நிறுவனத்துக்கு 2017-18 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.962 கோடி நட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஐடியா செல்லுலர் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் செல்போன் சேவை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலர், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை...

இண்டிகோ விமானத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆதித்ய கோஷ் ராஜினாமா

இண்டிகோ விமானங்களின் எஞ்சின்கள் பழுது ஏற்பட்ட பிரச்சினையால் பல்வேறு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து இண்டிகோ விமானத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆதித்ய கோஷ் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக இடைக்கால தலைமை செயல் நிர்வாகியாக ராகுல் பாட்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இண்டிகோ விமான...

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து உயர்வு

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 34,969  புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 10,692 புள்ளிகளில் நிறைவடைந்தது.  ஆக்சிஸ் வங்கி, ஆந்திரா...

நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை

நாளை முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் 28ம் தேதியும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இதையடுத்து திங்கட்கிழமை 30ம் தேதியும் புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை...

ரூ.600 கோடி வங்கிக்கடன் மோசடி - ஏர்செல் சிவசங்கரனின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை

600 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடி தொடர்பாக ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ஆவார். தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக திகழ்ந்தது ஏர்செல் நிறுவனம்....

உலகின் முதல் இடைநில்லாது நீண்ட தூர விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம்

உலகிலேயே மிக அதிக நேரம் இடைநில்லாது பயணிக்கும் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,  சிங்கப்பூரில் இருந்து 15,323 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடைநில்லாமல் 20 மணி...

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...!

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 714 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 10,618 புள்ளிகளில்...