​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹைதராபாத்தில் வேதித் தொழிற்சாலையில் தீ விபத்து

ஹைதராபாத்தில் வேதித் தொழிற்சாலையில் தீ விபத்து

ஹைதராபாத்தில் வேதித் தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜீடிமெல்டா ((Jeedimelta)) தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள வேதிப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பிடித்த தீ அருகில் உள்ள வேதிப் பொருள் கிடங்குக்கும் பரவியது. தகவல் அறிந்து 9...

கச்சத்தீவு தேவாலயத் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் இன்று புறப்பட்டுச் சென்றனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீனவர்களை சுங்கத்துறை, உளவுத்துறை ஆகிய பிரிவினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, 62 விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 103 மீனவர்கள் கச்சத் தீவுக்கு புறப்பட்டனர்....

ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை தொடங்கி வைக்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதியன்று தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக கலைவாணர் அரங்கில் விழா நாளை மாலை 5...

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கனடா பிரதமர் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தமது...

ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, மகனுடன் கைது

வங்கிக் கடன் மோசடிப் புகாரில், ரோட்டோ மேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி அவரது மகன் ராகுல் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் 3 ஆயிரத்து 695 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனைத்...

வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

சிவகங்கையில் வழக்கறிஞர்கள் அடாவடித் தனமாக தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிவகங்கையிலிருந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், அதனை உடனடியாகச்...

அனைத்து தொழிற்சங்கங்கள் ஒப்புதலுடன் மின்வாரிய ஊழியர் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்து

மின்வாரிய தொழிலாளர்களுக்கு 2.57 விழுக்காடு காரணி ஊதிய உயர்வு வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. மின்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஒருமனதாக கையெழுத்திட்டனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் மின் வாரிய ஊழியர்களின்...

அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்குமாறு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

ஏப்ரல் 4ந் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் – கமல்

மதுரையைப் போலவே திருச்சியிலும் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ளவிரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதிநடைபெற்றது. இத்தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்...