​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்

காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டதைத் தவிர, வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க இயலாது என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம்...

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு தண்டனை 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் - ஆஸி கிரிக்கெட் CEO

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சுத்தர்லாண்ட் தெரிவித்துள்ளார். ஜோகனஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் டாரன் லேமேனுக்கு தொடர்பில்லை என்பதால் அவர் பதவியை...

அரசு திட்டங்களுடன் ஆதார் இணைப்பதற்கான கெடு மார்ச் 31 உடன் முடிவு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ள நிலையில், அரசு நலத்திட்டங்களுடன் இணைப்பதற்கான கெடுவை மார்ச் 31க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன்...

ஸ்டாலினை அழைத்துச் சந்தித்த ஆளுநர்..! திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்

சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மாவட்டங்கள்தோறும் நடத்தும் ஆய்வு குறித்து, அழைப்பின் பேரில் சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்திருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுத்ததன் பேரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார். சுமார் 45...

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம்...

தமிழக ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வரும் 29-ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக...

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் தீர்மானிக்க வேண்டும் -கமல்ஹாசன்

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை, தமிழக அரசுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்களிடையே உரையாற்றினார். மிகுந்த...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நீர்த்து போகச் செய்ய முயற்சிப்பதாக அ.தி.மு.க மீது காங்கிரஸ் புகார்

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக எம்.பி.க்கள் முட்டுக்கட்டை போடுவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.மக்களவையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்களோ மத்திய அரசுக்கு...

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே ஸ்டெர்லைட், நியுட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள் தூண்டப்படுகின்றன - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாக...