​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ்-2 தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ்-2 தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ- மாணவிகள் பங்கேற்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை...

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் அஞ்சலி

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 83. ஜெயேந்திரர் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பிறந்த ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்ரமணிய மகாதேவ...

நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம், ஏராளமான ரசிகர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகத்தினர், மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். துபாயில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டுவரப்பட்டது. லோகந்த்வாலா பகுதியில்...

கடன்சுமையால் திவால் ஆனதாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் கோரிக்கை

கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏர்செல் செல்போன் சேவை நிறுவனம், 15 ஆயிரம் கோடி...

சேலம் மணிப்பால் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

இளைஞரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரது இரண்டு கிட்னி, இரண்டு கண்கள் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பேரம் பேசி வாங்கியதாக சேலம் மணிபால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சேலம் மாவட்டம்...

நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு தடை

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எழுதும் மாணவ, மாணவிகள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. வரம்பு நிர்ணயித்துள்ளது. இதில்...

சுபிக்சா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுப்ரமணியம் கைது

13 வங்கிகளில் 750 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுப்ரமணியனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் சுப்ரமணியன் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 600 கிளைகள் கொண்டிருந்த...

ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் புகழ் அஞ்சலி

காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஜெயேந்திரர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் டிவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர், தனது உன்னத சேவை, கருத்துக்களால் லட்சக்கணக்கான பக்தர்கள் இதயத்திலும்,...

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.துபாயில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் நேற்று இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு லோகந்த்வாலா பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்துக்கு கொண்டு...

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் இன்று காலமானார். காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83. இன்று காலை அவர் உடல் நலக் குறைவு காரணமாக சங்கரமடம் அருகே உள்ள சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்...