​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருந்து, மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த வேண்டும் - கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் உரை

வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருந்து, மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த வேண்டும் - கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் உரை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்துவதுதான், இரண்டாவது சுதந்திர போர் என்றும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்து, பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப...

இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ள கே-9 வஜ்ரா பீரங்கி வண்டி... பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு...

குஜராத்தில் எல் அண்டு டி நிறுவனம் கட்டமைத்த கே 9 வஜ்ரா பீரங்கியில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.  குஜராத்தின் ஹஸிரா நகரில் எல் அண்டு டி நிறுவனத்தின் ஆயுத தளவாட உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா...

மெக்சிகோவில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...20 பேர் உடல் கருகி பலி

மெக்சிகோவில் ராட்சத குழாயில் இருந்து கசிந்த பெட்ரோலை கிராம மக்கள் கேன்களில் சேகரித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ மாநிலத்தில் பெட்ரோல் எடுத்துச் செல்லும் ராட்சத பைப் லைனில் துளையிட்டு...

பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவுக்கு திரும்பி வர அழைப்பு - எடியூரப்பா

கர்நாடகாவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தப் போவதில்லை என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும்...

சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு அளித்த பட்டியலில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆண் என தகவல்

51 பெண்கள் சபரிமலைக்குச் சென்றதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அந்த பட்டியலில் இடம்பெற்ற ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆண் என தகவல் வெளியாகியுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்த ஆவணத்தில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட 51...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள்..!

தென் மாவட்டங்களைப் போலவே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும்  ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். வாடிவாசலில் இருந்து கம்பீரத்துடன் வெளிவந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு பிடிக்கப் பாய்ந்தனர்....

தமிழ் நாட்டில் புதிதாக 11 தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை... அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்....

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், பல்வேறு நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் தமிழக அமைச்சரவை...

கோடநாடு விவகாரத்தில் தி.மு.க. அவதூறு பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசாக அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுத்ததை தாங்க முடியாமல், கோடநாடு விவகாரத்தை கிளப்பி திமுக பொய் பிரசாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி...

மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை.... மம்தா ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி இன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மம்தா...

வடகொரிய அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் சந்திப்பு... அணுஆயுதக் குவிப்பை குறைக்க பேச்சுவார்த்தை

அணு ஆயுத குவிப்பை குறைப்பதற்கான முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அடுத்த மாத இறுதியில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இடமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித்...