​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் உள்ள பிரசன்ன பாஸ்கர வெங்கடரமண சுவாமி கோயில் தேர்த்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி...

இளைஞர்களைத் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

விழுப்புரம் அருகே இளைஞர்களைத் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆரோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் சுரேஷ், அய்யனார் ஆகியோர் கடந்த 30 ஆம் தேதி வானூர்...

உயர்ரக நாய்க்குட்டிகளை கொன்றதாக 3 இளைஞர்கள் மீது புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்ரக நாய்க்குட்டிகளை சித்ரவதை செய்து கொன்றதாக மூன்று இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சாயல்குடி மாதவன் நகரைச்சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் உயர்ரக நாய்க்குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். அப்போது அரண்மனை தெருவைச்சேர்ந்த தீனதயாளன்,கோபி மற்றும் அஜீத் ஆகியோர் தங்களுக்கும்...

திருப்பூர் அருகே அட்டைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அட்டைப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பழைய அட்டைப்பெட்டி, பஞ்சு, நூல் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழில்...

திருப்பூரில் மகாராணி நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம்

திருப்பூர் மாவட்டம் தராபுரம் அருகே நர்சிங்கல்லூரி விடுதியில் காலை உணவு உட்கொண்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராணி நர்சிங் கல்லூரி விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 8 மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு திடீர் வாந்தி, மயக்கம்...

திருப்பூரில் பனியன் குடோனில் திடீர் தீவிபத்து

திருப்பூரில் பனியன் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. திருப்பூர் கோம்பைத்தோட்டத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான பனியன் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும்...

நியாய விலைக் கடைக்கு நிழல் கூடம் அமைத்துக் கொடுத்த இளைஞர்கள்

பெரம்பலூர் அருகே திருவிழாவுக்கு வசூலித்த நன்கொடையில் எஞ்சிய பணத்தில் நியாய விலைக் கடைக்கு இளைஞர்கள் நிழல் கூடம் அமைத்துக் கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமத்தில் பொங்கல் விழாவை ஒட்டி இளைஞர்கள் நன்கொடை வசூலித்துள்ளனர். திருவிழா கொண்டாட்டத்தை அடுத்து நன்கொடையில் 20...

கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாகப் புகார்: ஸ்கேன் சென்டர்களில் மத்திய மருத்துவக்குழுவினர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாக எழுந்த புகாரையடுத்து அங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் மத்திய மருத்துவக்குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. நகர் பகுதியில் மட்டும் 15 முதல் 20 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன....

திருச்சியில் மினி பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில், மினிபேருந்து மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மினிபேருந்தை அடித்து நொறுக்கினர். அழிஞ்சுகுத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தாதம்பட்டியை சேர்ந்த ஆனந்த் இருவரும் போக்குவரத்து பணிமனை அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் மினி...

இலங்கை அரசின் மசோதாவுக்கு மீனவர்கள் கண்டனம்

எல்லைதாண்டும் படகுகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் இலங்கை அரசின் மசோதாவைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசின் மசோதா குறித்து மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை...