​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு...

சிறப்பு காவல்படை கமாண்டன்ட் வீட்டில் குழந்தைகளைக் கவனிக்க 6 காவலர்கள் பணியமர்த்தி இருப்பதாக சர்ச்சை

ஆடர்லிக்கள் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தனது குழந்தைகளை கவனிப்பதற்கு 6 காவலர்களை பணியமர்த்தி இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. போலீசாருக்கு ஏற்படும் பணிச்சுமை, மனச்சோர்வு போன்றவற்றால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்த வழக்கு...

கும்மிடிபூண்டியில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் விடிய விடிய இசை விழா

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிபூண்டியில் நாதஸ்வரம் தவில் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இசை விழா நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர்  தியாகராஜசுவாமிகள், ஷாமா சாஸ்திரிகள்  ஆகியோருக்கு  மரியாதை செய்யும் விதமாக பஞ்ச ஆராதனை கீர்த்தனைகளை நாதஸ்வர- தவில் இசைக்கலைஞர்கள் இசைத்தனர்.    ...

70 வயது கடந்த தி.மு.கழக முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா - பொற்கிழிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.  70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்து 306 தி.மு.க கழக முன்னோடிகளுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள பொற்கிழிகள் வழங்கப்பட்டன.  அப்போது பேசிய உதயநிதி...

யானைகளை பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

ஒசூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். போடூர் வனப்பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 யானைகள் பிள்ளைகொத்தூர் கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தன. இந்த 3 யானைகளில் ஒரு சமீபத்தில் 3...

திருப்பூரில் நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருப்பூரில் குடிபோதையில்  வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய  நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெத்திசெட்டிபுரம் பகுதியில்  பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் நைஜீரியர்கள், கணவருடன் சென்ற கர்ப்பிணிப் பெண் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர்...

தங்கத்தை தாள் போன்ற வடிவில் கடத்தி வந்த நபர் கைது

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தகடுகளாக மாற்றி துபாயிலிருந்து கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. ஸ்பைஸ் ஜெட்...

காண்ட்ராக்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

விழுப்புரத்தில் காண்ட்ராக்டர் வீட்டின் மீது பெட்ரோல் கலந்த நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக 2 பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள திருநகரில் வசித்து வரும் பொற்செழியன் என்பவர் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு...

தமிழகம் வரும் விசுவஇந்து பரிஷத் ரதயாத்திரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு

தமிழகத்திற்கு இன்று வரவுள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஐந்து நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய...

காவிரியில் ரசாயன கழிவு, 5 டன் மீன்கள் செத்து மிதந்தது..!

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்றில் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்பட்டதால், 5 டன் எடையுள்ள பல்வேறு வகையான மீன்கள் செத்து மிதந்தன. வெயில் கொடுமையால் மீன்கள் இறந்ததாக வினோத விளக்கம் தந்த அதிகாரிகளின் அறியாமை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில்...