​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கும்பகோணத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ரோபோ

கும்பகோணத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ரோபோ

கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஆன்மீக நகரம், குப்பையில்லா நகரம், சுத்தமான சாலைகள் கொண்ட நகரம் என பல முன்னுதாரணங்களைக்கொண்ட கும்பகோணத்தில் 1962-ஆம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், குப்பைகளை தரம்...

பழிவாங்குவதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்து கொலை

தஞ்சையில் நண்பனை பழிவாங்குவதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்து கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தஞ்சையைச் சேர்ந்த சசிகுமார், சங்கர் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில்...

தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள வடவாறு பாலம்

தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள வடவாறு பாலத்துக்குப் பதில் புதிய பாலம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பாலம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே 4 பள்ளிக் கூடங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்துள்ள நிலையில் காலை...

வனப்பகுதியில் யானையை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்க வேண்டாம் - வனத்துறையினர்

சத்தியமங்கலம் அருகே சாலையோர வனப்பகுதியில் உணவு உட்கொள்ளும் யானையை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்க முயல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும் திண்டுக்கல் - பெங்களூரு நெடுஞ்சாலை ஓரமாக உள்ள வனப்பகுதியில் உணவுக்காக,...

வனப்பொருள் சேகரிக்க மலைவாழ் மக்களுக்கு வனத்துறை தடை என புகார்

ஈரோடு மாவட்டத்தில் வனப்பொருள் சேகரிக்க தடை விதிக்கப்பட்டதால்  மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்தில் கெத்தேசால், கேர்மாளம், ஜே.ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர்கள், வனத்தில் தேன்,...

கொள்ளைபோகும் ஆபரணக் கற்கள் - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் இயற்கையாக பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆபரணக் கற்கள் இரவு பகலாக கொள்ளைபோவதாகவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அதனைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழகத்தின் மைய மாவட்டமான கரூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். வடக்கே காவிரி...

வகுப்பறை வன்முறையால் விபரீதம்..! மாணவன் தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு அறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் மயக்கமடைந்த மாணவர் இறந்து விட்டதாக கருதி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்...

லாரிகள் வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரம் லாரிகள் பங்கேற்பு

தூத்துக்குடியில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு உரம் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை உயர்வு சுங்க சாவடி கட்டணம் உயர்வு போன்றவைகளை கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில்...

அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால்  அருவியில் வெள்ளம் பெருகியுள்ளது. இதனால் இங்கு குளிப்பதற்காக திரண்டு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் ஆனந்தக் குளியல் போட்டு கொண்டாடினர்....

தமிழக அரசு பிளாஸ்டிக் தடையால் புத்துயிர்பெறும் கைத்தறி நெசவு

தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்ததை தொடர்ந்து, சென்னிமலை பகுதியில் கைத்தறியால் தயாரிக்கப்படும் துணி பைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழலைக் கெடுத்து, மண் வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக்குக்கு தமிழக அரசு தடைவித்துள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இயங்கிவரும்...