​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லையில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இன்று தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தையொட்டி நெல்லையில் எரிபொருளை சேமிக்க மாற்று சக்திகள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மோட்டார் வாகனங்களை குறைத்து மிதிவண்டி...

திருப்பூரில் கெமிக்கல் குடோனில் திடீர் தீ விபத்து

திருப்பூர் கெமிக்கல் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்துள்ளது. திருப்பூர் குமரன் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் குடோனில், சாய ஆலைகளுக்கு தேவையான கெமிக்கல்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்று காலை குடோன் உட்பகுதியில்...

எச்.ராஜா உருவபொம்மையை எடுத்துக்கொண்டு ஓடிய போலீசார்

திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திருமாவளவனுக்கு எதிராக எச்.ராஜா அவதூறாகப் பேசி வருவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர். பின்னர்...

ஒற்றை நெல் நாற்று நடவு முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று வரும் விவசாயி

திருவண்ணாமலை மாவட்டம் தென்வணக்கம்பாடியைச் சேர்ந்த விவசாயி ஒற்றை நெல் நாற்று நடவு முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாறு ஊராட்சியைச் சேர்ந்த தென்வணக்கம்பாடி முழுவதும் வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கும் ஊராகும். இந்த ஊரைச் சேர்ந்த...

வீண் திருட்டுப்பழியால் மருத்துவமனையின் 3-வது தளத்தில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செவிலியர் மீது நகையைத் திருடியதாக வீண் பழி சுமத்தி,  ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதே அவரின் தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  நாகர்கோவிலில் பெஜான் சிங் என்ற கண் மருத்துவமனையில், செவிலியராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், நேற்று...

குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ காவடி எடுத்த போலீஸார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ வேண்டி அப்பகுதி போலீசார் முருகனுக்கு காவடி எடுத்து சென்றனர். கன்னியாகுமரியில் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளியன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து அருகிலுள்ள குமாரசுவாமி...

1.48கோடி ரூபாய் செலவில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே யானைகள் புத்துணர்வு முகாமை அமைச்சர்கள் வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடாலயங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்...

ஊத்தங்கரை அருகே பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோவில் - மக்கள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இரு பிரிவினர் மோதல் காரணமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் வேணுகோபாலசாமி கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  ஊத்தங்கரையை அடுத்த கோடவலசை கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வேணுகோபாலசாமி...

நெருங்கும் பொங்கல் பண்டிகை - மண்பானை தயாரிப்பு தீவிரம்

நியாயவிலைக்கடையில் பொங்கல் பொருட்களுடன் சேர்த்து மண்பானையும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த காவிலி பாளையம், அலங்காரி பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரிய வகை...

காட்டு பன்றிகளை வேட்டிடையாடிய 19 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம்

காட்டு பன்றிகளை வேட்டையாடியதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த 9 நபர்களுக்கு தலா ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து வன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் சோலை வன காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட...