​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணை கேலி செய்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் - போலீசார் குவிப்பு

பெண்ணை கேலி செய்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் - போலீசார் குவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்றிரவு எழுநூற்றுமங்கலம் கிராமத்தில் வீதிஉலா நடந்தது. அப்போது இளம்பெண்ணை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சையில் எழுநூற்றுமங்கலம் கிராமத்தினருக்கும், கீழகுட்டப்பட்டி கிராமத்தினருக்கும்...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் குழு நாளை சென்னை வருகை

உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் தமிழக அரச சார்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர்கள் குழு, தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த நாளை சென்னை வருகின்றது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையடுத்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு...

காவிரி மீட்புப் பயணத்தை இரு குழுக்களாக டெல்டா பகுதி முழுவதும் நடத்த முடிவு - மு.க.ஸ்டாலின்

காவிரி மீட்புப் பயணத்தை இரு குழுக்களாக டெல்டா பகுதி முழுவதும் நடத்த உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன்,...

தமிழகத்தின் ஐந்து இடங்களில் தமிழக அரசு சார்பில் Wifi மண்டலங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

வயர்லெஸ் இணைய வசதி வழங்குவதற்காக, சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரையில் அம்மா வைஃபை மண்டலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில்...

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை அனுப்புகிறார்கள் - கமல்ஹாசன் விமர்சனம்

கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கேட்டால், துணை வேந்தரை அனுப்புவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்லைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர்...

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள 6 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள 6 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார். 8 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இன்று மருத்துவர்கள் முத்துச்செல்வன்,...

‘ஆயுஷ்’ கல்விக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்பது கண்டனத்துக்குரியது - மு.க.ஸ்டாலின்

மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக ‘ஆயுஷ்’ கல்விக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்பை மீறி மருத்துவப்படிப்புக்கு மத்திய அரசு நீட் தேர்வைக் கொண்டு வந்து, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  காவிரிப் பாசன மாவட்ட மாணவர் கூட்டமைப்பினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆற்றுப்பாலம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்....

அண்ணா பல்கலைக்கழகம் கல்வி மயமாக்கப்பட்டுள்ளது, காவி மயமாக்கப்படவில்லை - தமிழிசை

அண்ணா பல்கலைக்கழகம் கல்வி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், காவி மயமாக்கப்படவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்....

அண்ணா பல்லைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா தேர்வு செய்யப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் செயல் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இருப்பதாக முகநூல் பதிவில் திமுக செயல்...