​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்: சசிகலா பரோல் கோரி விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல்

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்: சசிகலா பரோல் கோரி விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல்

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், கணவரைப் பார்க்க சசிகலா மீண்டும் பரோலில் சென்னைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொருத்தப்பட்டன. இதனிடையே, நெஞ்சுவலி காரணமாக நேற்று...

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினிகாந்த் மறுப்பு

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

யுகாதி, குடி பட்வா திருநாளுக்கு வாழ்த்து அனுப்பிய முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் நன்றி

யுகாதி மற்றும் குடிபட்வா திருநாளுக்கு வாழ்த்து அனுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்துள்ளார். இன்று கொண்டாடப்படும் யுகாதி மற்றும் குடிபட்வா திருநாளையொட்டி, ஆளுநருக்கு முதலமைச்சர் மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். வாழ்த்துக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆளுநர்,...

பொறியியல் படிப்புகள் மீதான மோகத்தை குறைக்கும் மாணவர்கள்

பொறியியல் படிப்புகள் மீது அதிக நாட்டமுடைய மாணவர்கள், தற்போது இளநிலை அறிவியல் படிப்புகள் மீது கவனத்தை திருப்பியிருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2015-16 கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 50 ஆயிரமாக...

வரும் 24மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வரும் 24மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகம் மற்றும் திசைமாறுபடும் பகுதி தென்னிந்தியாவின் உள்பகுதியில் நிலவுவதால் தமிழகத்தின்...

SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கட்சிதான் நிலைப்பாடு எடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஆதரவளிப்பது குறித்து கட்சியே முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை...

'சிப்' வைத்து சீப்பான அரசியலை செய்கிறார்கள்: டி.ராஜேந்தர்

மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பது ஒரு தந்திர வாக்குப்பதிவு என லட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிப்பை வைத்து சீப்பான அரசியலை செய்கிறார்கள் என்றார்....

குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 9 பேர் மலையிலேயே தீயில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்து மதுரை, கோவையில் அரசு மற்றும் தனியார்...

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலாவின் கணவரும், புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான நடராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கல்லீரம் மற்றும் சிறுநீரக...