​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த இயலாத கமல்ஹாசன் ட்விட்டரில் அரசியல் செய்வதாக ஜெயக்குமார் விமர்சனம்

போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த இயலாத கமல்ஹாசன் ட்விட்டரில் அரசியல் செய்வதாக ஜெயக்குமார் விமர்சனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்காக போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த இயலாத கமல்ஹாசன் ட்விட்டரில் அரசியல் செய்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல நடிகரான கமல்ஹாசனை அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். உண்ணாவிரதப் போராட்டத்தின்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை IPL நடத்தக் கூடாது - வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்தக் கூடாது என்றும், மீறி நடத்தினால் ஐ.பி.எல்., வீரர்களின் விடுதியும், விளையாட்டின் போது மைதானமும் முற்றுகையிடப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். ...

திருவெறும்பூர் உஷாவின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் நிதியுதவி

திருச்சி அருகே காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து பலியான உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மகளிர் தினத்தன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் நடைபெற்ற...

நாளைய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு : வெள்ளையன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வெள்ளையன், பிரதமரின் தமிழக வருகையை முன்னிட்டு வரும் 11-ஆம் தேதி போராட்டம்...

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பிலும், நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இதனிடையே, டெல்லி சென்றிருந்த ஆளுநர்...

பொதுமக்களிடம் அத்துமீறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாஸ் மனு

தமிழகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.யிடம் நடிகர் கருணாஸ் மனு அளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் ஒரு இளைஞரை 3 போக்குவரத்துக் காவலர்கள் தாக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி...

2 ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டங்கள் - செங்கோட்டையன்

2 ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ஆம்...

நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு தார்மீக ஆதரவு மட்டுமே - விக்ரமராஜா

நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு தார்மீக ஆதரவு உண்டு என்றும் ஆனால் கடைகள் அடைக்கப்படாது என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் விக்ரமராஜா, நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் நாளை...

தலைமைச் செயலாளர் உடன் சிறைத்துறை ADGP சந்திப்பு, நீண்டநாள் சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசனை?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் கைதிகளை விடுவிப்பது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொடர்ந்து, ...

காவிரி பிரச்சனையில் தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

காவிரி பிரச்சனையில் தமிழக மக்கள் போராட்டங்களை கைவிட்டு, அமைதி காக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,...