​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவலர்களை தாக்கியதாக பதிவான வழக்கில் சீமான் உள்ளிட்ட நால்வருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

காவலர்களை தாக்கியதாக பதிவான வழக்கில் சீமான் உள்ளிட்ட நால்வருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னையில் காவலர்களை தாக்கியதாக பதிவான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்ததாக கூறியுள்ள மூன்று துணை வட்டாட்சியர்களையும் எதிர்மனுதாரர்களை சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கறிஞர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்....

அப்போலோவில் பணியாற்றிய மருத்துவர் பிரசன்னா மற்றும் செவிலியர் ஷீலா ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர்

அப்போலோவில் பணியாற்றிய மருத்துவர் பிரசன்னா மற்றும் செவிலியர் ஷீலா ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரான அவர்களிடம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை...

ஸ்டெர்லைட் அரசாணை தொடர்பான வழக்கு ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஸ்டைர்லைட்டை மூடுவதற்கான அரசாணை  தொடர்பான வழக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை தொடர்ந்து, ஸ்டெர்லைட்டின் இந்த...

நீட் தேர்வை மையமாக வைத்து தமிழக அரசியல்வாதிகள் சிலர் வதந்தி பரப்புகின்றனர்:பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசியல்வாதிகள் சிலர், சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணமாக வைத்து, வதந்திகளை பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்....

காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உதவ வேண்டும் - ரஜினிகாந்த்

காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலா திரைப்படம் நாளை கர்நாடக மாநிலத்தில்  130 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று...

வெயிட்டேஜ் மதிப்பெண் இன்றி ஆசிரியர்களை நியமிக்க பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்

வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது, பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதன் அவசியம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. அப்போது பேசிய திமுக...

பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைப்பது பற்றி ஆலோசித்து முடிவு : மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு ஓ.பி.எஸ். பதில்

கச்சா எண்ணெய்க்கான விலை சர்வதேச சந்தையில் குறைந்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கேரளாவில் பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்ததுபோல, தமிழகத்திலும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

நீட் விவகாரத்தில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் விவகாரத்தில் அரசியலை நுழைக்கக் கூடாது எனவும், மாணவர்களின் முடிவுக்கே அதனை விட்டுவிட வேண்டும்...

இலவச ஆடு, மாடு திட்டத்தைப் போல, இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இலவச ஆடு, மாடு திட்டத்தைப் போல, இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள 30 கால்நடை நிலையங்களுக்கு...