​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை நிறுவனக் கிடங்கில் தீ விபத்து

சென்னையில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை நிறுவனக் கிடங்கில் தீ விபத்து

சென்னை பாரிமுனையில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பாரிமுனையில் உள்ள மூர் தெருவில் ஜெய்சிங் ஹைட்ரோ ஸ்பேர் பார்ட்ஸ் என்ற விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது....

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலய தேரோட்டம்

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிவபெருமான் அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று...

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை

சென்னை சேலையூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  சேலையூர் சந்தானம்மாள் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற சுற்றுலாத்துறை ஊழியரான அவர், நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள...

முதுநிலை மருத்துவம் MS, MDS படிப்புகளில் சேரக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 981 இடங்களில் 980இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு...

திருச்சி தங்கநகைத் தயாரிப்பாளர் உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினர் மீண்டும் வழக்குப் பதிந்து விசாரணை

திருச்சியைச் சேர்ந்த நகை தயாரிப்பாளர் சென்னையில் இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்த அவர் சவுகார்பேட்டையில் அரைக்கிலோ...

சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு விரைந்து நிதியுதவி வழங்க வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

சென்னையில், 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு விரைந்து நிதியுதவி வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் - நேருபூங்கா மற்றும் டிஎம்எஸ் - சின்னமலை...

கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பையனூர் பகுதியில் இயங்கி வரும் விநாயகா மிஷன்ஸ் அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பையோ...

தொழிலதிபர் வீட்டில் திரைக்கதை, வசனம் எழுதிச் சென்று திருடிய சினிமா உதவி இயக்குநர் உள்ளிட்ட கும்பல் கைது

சென்னை அருகே தொழிலதிபர் வீட்டில் திரைக்கதை, வசனம் எழுதிச் சென்று  திருடிய சினிமா உதவி இயக்குநர் உள்ளிட்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.  சென்னையை அடுத்த ஆவடியில் கோவர்த்தனகிரி பகுதியில் தொழிலதிபர் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 8ம்...

புரோக்கராக நடித்து பைனான்சியர் கடத்தல், கும்பலுக்கு வலை..!

சென்னையில் வங்கி கடன் பெற்று தரும் புரோக்கர் போல நடித்து பைனான்சியரை காரில் கடத்திச் சென்று 33 லட்சம் பணம், 28 சவரன் நகைகளை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மோகன்...

பொதுக் கழிப்பிடத்திற்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

சென்னை தேனாம்பேட்டையில்  பொதுக்கழிப்பிடத்திற்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட ஆண்சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். வெங்கட்ராமன் தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் பெண்கள் பகுதிக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூடப்பட்டிருந்த கதவுகளை உடைத்து உள்ளே சென்று...