​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மறுஅறிவிப்பு வரும் வரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

மறுஅறிவிப்பு வரும் வரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  டிஜிட்டல் வடிவிலான திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம்...

ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை யொட்டி பார்வையற்றோருக்கு அன்னதானம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை, பூந்தமல்லியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை யொட்டி பார்வையற்றோர் இல்லத்தில் உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று அன்னதானம் வழங்கினார். அப்போது உடன் இருந்தவர்கள் முண்டியடித்தால் திமுக மாவட்ட செயலாளர் நாசர் என்பவர் "தலையிட்டு" கூட்டத்தை கட்டுப்படுத்தினார் பெண்கள் சிலர் உதய நிதியுடன்...

அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தூக்கிட்டு கொள்வது போன்றும், உருவ பொம்மையை எரிப்பது போன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட கல்லூரி மாணவர்கள் பாரிமுனையில் உள்ள சட்ட கல்லூரி வளாகத்தில்...

அமைச்சர் O.S.மணியனின் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் என முதற்கட்டப் பிரேதப் பரிசோதனையில் தகவல்

அமைச்சர் ஓ.எஸ். மணியனின் ஓட்டுநர் மாரடைப்பாலேயே உயிரிழந்ததாக முதற்கட்டப் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, மரணத்தில் இருந்த மர்மம் விலகியுள்ளது.  சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில்...

காவல்துறையினர் அயராது மக்கள் பணியாற்றுவதால்தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் காவல்துறையினர் அயராது மக்கள் பணியாற்றுவதால்தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  61ஆவது அகில இந்திய காவலர் திறனாய்வுப் போட்டிகள் வண்டலுர் அருகே உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தில் கடந்த 24ஆம் தேதி...

பிரபல ரவுடி ராதா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பு

பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, 75 ரவுடிகள் ஒரே இடத்தில் பிடிபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தலைமறைவு ரவுடிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி...

போலீஸ் எனக் கூறி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது

சென்னை ராயப்பேட்டையில் போலீஸ் எனக்கூறி பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோபாலபுரத்தைச் சேர்ந்த யூஜின் ரீஜா என்ற பெண், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில்...

கார் ஓட்டுநரின் மரணத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் O.S.மணியன் விளக்கம்

மரணத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுனர் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓட்டுனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற போது தான் வீட்டில் இல்லை என்ற ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா...

ஆளுநர் மாளிகைக்கு போர்வை, மெத்தை உறைகள் வாங்கியதில் மோசடி செய்த கடை உரிமையாளர் கைது

ஆளுநர் மாளிகைக்கு போர்வை, தலையணை, மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதில் மோசடி செய்த, அடையாறில் உள்ள பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கடந்த 5 ஆண்டுகளாக, அடையாறு L.B.சாலையில் உள்ள சேட் பர்னிஷிங் என்ற...

இன்று ஓய்வுபெற இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல் அதிகாரி பாண்டியன் இன்று ஓய்வுபெற இருந்தார். இந்நிலையில், லஞ்சம் வாங்கியது தொடர்பான புகாரில் அவர் மீது...