​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எழும்பூரில் நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது

எழும்பூரில் நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு உலகின் பழைமையான நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இஐஆர் 21 என்கிற நீராவி எஞ்சின் 1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ரயில்களில் பயன்படுத்தப்பட்டது. 1909ஆம் ஆண்டு இந்த எஞ்சின் பயன்பாட்டில்...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் மீது மனைவி புகார்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர் ஒருவர், முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர், நவீன். தனியார்  தொலைக்காட்சியில் பல குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற இவர், கடந்த 2016ஆம்...

தயாரிப்பாளர் கிஷோர் குமார் கொலைமிரட்டல் விடுப்பதாக, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார்

தயாரிப்பாளர் கிஷோர் குமார் கொலைமிரட்டல் விடுப்பதாக,  திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் ஞாயிறன்று அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் நடைபெற...

கடற்கரை சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 15 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் மேட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழனன்று இரவு, மெரீனா கடற்கரைப் பகுதியில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் காத்திருந்த இளைஞர்கள் திரைப்படக் காட்சிகள் போன்று ஒரே நேரத்தில் பைக்...

சென்னை ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை...

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் முதல்வர்கள் நியமன வழக்கில் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான நான்கு கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நான்கு கல்லூரிகளுக்கான முதல்வர் பதவியிடங்களை முறைகேடாக நிரப்ப முயல்வதால், அதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை...

சென்னையில் உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகளின்படி திருடர்களைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், வெள்ளியன்று இரவு தனது நண்பருடன் பட்டினப்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் உணவு அருந்தினார். பின்னர் வெளியே வந்த அவர், தான் விட்டுச் சென்ற...

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றி விழிப்புணர்வு.. நுட்பங்களை படைத்து அசத்தும் மாணவர்கள்..!

சென்னையில் நடைபெறும், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாடு மாநாட்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் தொழில்நுட்பங்களை, பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி மாணவர்கள் தயாரித்து காட்சிப்படுத்தி அசத்தியுள்ளனர்.... சென்னை கிண்டியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், இந்தாண்டுக்கான, 2 நாள் திறன் மேம்பாடு...

அரசு கல்லூரி உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி இயக்குநர் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை

அரசு கல்லூரி ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டால் அரசுக்கு 56 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு...

சென்னை அருகே ஒரேநாளில் இருவீடுகளில் 8.5 கிலோ வெள்ளி திருட்டு

சென்னை அபிராமபுரத்தில் ஒரேநாளில் இருவீடுகளில் எட்டறை கிலோ வெள்ளி திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அபிராமபுரம் டி.டி.கே ரோடு சாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் நேற்று மாலை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஆறரைக் கிலோ வெள்ளியை...