​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மதுரை அருகே ஒருதலைக் காதலால் தீவைக்கப்பட்டதால், மருத்துவமனையில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவியை ஒருதலையாக காதலித்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவன், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி...

சுயநினைவை இழந்து தண்ணீரில் மூழ்கியே ஸ்ரீதேவி உயிரிழந்ததாக துபாய் அரசு அறிவிப்பு

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக துபாய் அமீரக அரசு தெரிவித்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மரணம், விடுதி அறையில் இருந்தபோது சுயநினைவை இழந்து நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக, மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது என துபாய் அமீரக அரசின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணம்...

நடிகை ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் பணி நிறைவு

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை நட்சத்திர ஓட்டல் அறையில் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணை...

ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதி நீக்கக் கோரிய வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டதால், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில்,...

முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் சந்தித்துப் பேசினார். தமிழகம் வந்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் சென்னையை அடுத்த மணலியில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து...

காதலிக்க மறுத்ததால் தீவைக்கப்பட்டதால் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மதுரை அருகே ஒருதலைக் காதலால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவி, அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு...

மணலியில் 3,110 கோடி ரூபாய் செலவில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் ஆலை- தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மணலியில் 3 ஆயிரத்து 110 கோடி ரூபாய் செலவில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் ஆலையை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெட்ரோலியக் கழிவுகளை மேம்படுத்தும் இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு...

திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவச் சான்று அவசியம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் உயர்...

மதுரை அருகே காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு

மதுரை அருகே காதலிக்க மறுத்ததால், பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட பள்ளி மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவி, அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். அவரை ஒருதலையாக காதலித்த...

உடுமலை சங்கர், போரூர் சிறுமி கொலை வழக்கு:தண்டனையை உறுதி செய்வது தொடர்பாக குற்றவாளிகள் தரப்பும், அரசு தரப்பும் பதிலளிக்க உத்தரவு

உடுமலை சங்கர் மற்றும் போரூர் சிறுமி கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்வது தொடர்பாக, குற்றவாளிகள் தரப்பும், அரசு தரப்பும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில், காதல் திருமணம் செய்து கொண்ட சங்கர், கவுசல்யா...