​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
BE, படிப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

BE, படிப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்,...

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.  தமிழ்நாட்டில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  பொறியியல்...

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன்

நாட்டின் பிற மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த வகையில் தமிழகத்தின் பள்ளிக் கல்விப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆக்ஸ்ஃபோர்டு நிறுனவத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ற தொழில்...

கட்டண விவர பலகைகள், அட்டவணைகள் வைக்க வேண்டும் - செங்கோட்டையன்

கட்டண விவரங்கள் அடங்கிய பலகைகள், அட்டவணைகளை பார்வைக்கு வைக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்...

JEE மெயின் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் அகில இந்திய அளவில் 21-வது மற்றும் 27-வது இடம்

ஜே.இ.இ. மெயின் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் அகில இந்திய அளவில் 21-வது மற்றும் 27-வது இடங்களைப் பிடித்துள்ளனர். என்.ஐ.டி., ஐ.ஐ.டி. உள்ளிட்ட சிறந்த மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற தேசிய அளவிலான ஜே.இ.இ. மெயின்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அம்மாநில தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகின. இதில், பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 52 பள்ளிகளும்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : மேலும் 2 பேர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களில் மோசடி நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சைபர்...

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான cut off மாற்றியமைப்பு

தமிழகத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் பெரும்பாலான கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கட்...

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிகளை ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்கவும், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  மாவட்டந்தோறும் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் குழு...

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகாது என தகவல்

பொருளியல் பாட மறு தேர்வு காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகாது என தகவல் வெளியாகியுள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தால் ஒரு மாதத்துக்குப் பின் கடந்த 26-ம் தேதி பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடத்தப்பட்டது. இதன் காரணமாக...