​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ரூ.3 கோடியில் மருந்து,மாத்திரைகள் சுகாதாரத்துறை வழங்க உள்ளது

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ரூ.3 கோடியில் மருந்து,மாத்திரைகள் சுகாதாரத்துறை வழங்க உள்ளது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுக்காக 3 கோடி ரூபாயை சுகாதாரத்துறை வழங்க உள்ளதாக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பிஎஸ்சி, விவசாயம் பிஎஸ்சி, தோட்டக்கலை படிப்புகளுக்கான...

பொறியியல் கலந்தாய்வுக்காக அரசு கல்லூரிகளில் 42 ஆன்லைன் மையங்கள் - கே.பி.அன்பழகன்

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்காக அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீட்டில் இருந்தபடியேகூட ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்றும் கலந்தாய்வுக்கான...

பொஜூலை 25ந் தேதி தொடங்கும் பி.இ., கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு

கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திருப்பித்தரத்தக்க முன்வைப்பு தொகையாக 5 ஆயிரம் ரூபாய்...

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

நாட்டின் பழமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தொடங்கியது. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளே இருக்கும் இந்தக் கல்லூரியின் 225 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 1947 முதல்1951ம் ஆடு...

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி தொடக்கம்...

பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது. மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றார். 2 நாட்கள் துணை கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்....

CBSE பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமென்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று கடந்த மார்ச் 2 ஆம்...

நீட் தேர்வை அவரவர் மாவட்டத்திலேயே இனி எழுதலாம்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வில் தமிழில் வினாத்தாள் தயாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கேள பயன்படுத்தப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார்....

சென்னை சீமாட்டி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பி.எட்., படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது

பிஎட் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஒற்றைச் சாளர முறையில் பி.எட்., படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 707 பி.எட்., இடங்கள்...

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என AICTE தலைவர் அனில் சகஸ்ரபுதே பேட்டி

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சகஸ்ரபுதே (Anil Sahasrabudhe) தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஏ.ஐ.சி.டி.யின் தென்னிந்திய மண்டல ஆலோசனை கூட்டத்துக்குப் பின்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பிரிவு 2ம் கட்ட கலந்தாய்வு நிறைவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், தகுதிபெற்றவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சிறப்புப் பிரிவினருக்கு ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு...