​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார் குண்டு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் மொகதிஷூவில் நேற்று காரில் குண்டுவைத்து தகர்த்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அதிபர் மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டும்...

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து பணியிடம் திரும்புபவர்களுக்காக தற்காலிக எரிபொருள் நிரப்பும் மையங்கள்

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மக்கள் பணியிடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு வசதியாக, பல்வேறு பகுதிகளில் தற்காலிக எரிபொருள் நிரப்பும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவாரக் கொண்டாட்டத்திற்குப் பின் வாகனங்கள் மூலம் அவர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக, நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக எரிபொருள்...

ஜெருசலேமில் தூதரகத்தை திறக்க அமெரிக்கா முடிவு

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜெருசலேமில் தனது தூதரகத்தைத் திறக்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவுக்கு பதிலாக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையும்...

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா 27ஆம் தேதி இந்தியா வருகை

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, வரும் 27ஆம் தேதி இந்தியா வருகிறார். அண்மையில் பிரதமர் மோடி ஜோர்டான் சென்றபோது, மன்னர் இரண்டாம் அப்துல்லா சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், தனி ஹெலிகாப்டரில் மோடியைப் பாலஸ்தீனத்தின் ரமல்லாவுக்கு அனுப்பிவைத்தார். ஜோர்டான் மன்னர் வருகையின்போது பாதுகாப்பு, வணிகம்,...

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா கோலாகலமாக தொடக்கம்

தமிழகம் - இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்து 103 பேர் தேர்வாகினர். இவர்கள் அனைவரும் வெள்ளியன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுங்கத்துறை, உளவுத்துறையினர் நடத்திய சோதனைக்குப்...

சீக்கிய பாங்க்ரா நடனம் ஆடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு

கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு ஆடிய சீக்கிய பாங்க்ரா நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு குடும்பத்துடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள கனடா இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் டிரம்புக்கு திருப்தி அளிக்கவில்லை- வெள்ளை மாளிகை

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அதிபர் டிரம்புக்கு நிறைவளிக்கும் வகையில் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் உறவு பற்றிய தெளிவு ஏற்படும் வகையிலும், முதல்முறையாக பாகிஸ்தானை அதன் செயல்களுக்கு பொறுப்பாக்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, வெள்ளை மாளிகையின்...

புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து பணியிடம் திரும்பும் சீனர்கள்

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், நாடு முழுவதும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சீனர்கள் பின்பற்றும் சந்திர காலண்டரின்படி, கடந்த வெள்ளியன்று புத்தாண்டு பிறந்தது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தவர்கள் சொந்த...

Nest Cam IQ கண்காணிப்பு கேமராவுக்கு Google Assistant இணைப்பு

Nest Cam IQ கண்காணிப்பு கேமராவுக்கு Google Assistant இணைப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Nest Cam IQ கேமராக்கள் உள்ளரங்க கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயனாளர்கள் குரல் மூலம் கேமராக்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் விதத்தில்...

துபாயில் பிரபலமடைந்து வரும் சாகச பயண கம்பிப்பாதை

துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப் பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும், பிரம்மாண்டமான கட்டிடங்களையும் பறவைப்பார்வையில் பார்த்து ரசிக்க...