​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்ஜி குழுமத் தலைவர் கூ பான் மூ உடல்நலக் குறைவால் காலமானார்

எல்ஜி குழுமத் தலைவர் கூ பான் மூ உடல்நலக் குறைவால் காலமானார்

தென்கொரியாவின் எல்ஜி குழுமத் தலைவர் கூ பான் மூ உடல்நலக் குறைவால் காலமானார். தென்கொரியாவின் நான்காவது பெரிய தொழில்வணிக நிறுவனமான எல்ஜி குழுமத்தின் தலைவராக 1995ஆம் ஆண்டு முதல் கூ பான் மூ செயல்பட்டு வந்தார். கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால்...

கால்வாய் போல பயணிக்கும் எரிமலை தீக்குழம்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலையின் தீக்குழம்புகள் மிகப்பெரிய கால்வாயைப் போல பயணித்து வரும் மிரட்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள கிலாயூ (( Kilauea)) என்ற சக்திவாய்ந்த எரிமலை, 2 வாரங்களுக்கு முன் வெடித்தது. தொடர்ந்து லாவா எனப்படும் தீக்குழம்புகளை...

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை கைவிடுவதாக சீனா அறிவிப்பு

அமெரிக்கா உடனான வர்த்தகப் போரை கைவிடுவதாக அறிவித்துள்ள சீனா, இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய மதிப்பில் மேலும் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க...

பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகை ஏசியா அர்ஜன்டோ கடும் எச்சரிக்கை

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேடை ஏறிய நடிகை ஏசியா அர்ஜன்டோ ஹாலிவுட்டில் பெண்களை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தும் ஆண்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரங்கில் அமர்ந்துள்ள ஆண்கள் பலர் இக்குற்றத்தை செய்தவர்கள்தான் என்று பகிரங்கமாக சாடிய நடிகை, நீங்கள் யார் என்பது...

பூமியில் பதிக்கப்பட்டிருந்த வெந்நீர் குழாய் வெடித்துச் சிதறியதில் உயிர் தப்பிய முதியவர்

ரஷ்யாவில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த வெந்நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் இருந்து முதியவர் ஒருவர் அதிசயமாக உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன. பர்நுல் ((Burnaul)) என்ற இடத்தில் சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் பூமிக்கு அடியில்...

இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் கடுமையான புழுதிப்புயல்

இந்தியாவின் வடமாநிலங்களைத் தொடர்ந்து சீனாவிலும் கடுமையான புழுதிப்புயல் வீசி வருகிறது. சோங்கிங் ((Chongqing)) என்ற இடத்தினருகில் தற்போது வீசி வரும் புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கட்டுள்ளது. புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பல உயரத்திற்கு மேலெழும்பி தூக்கி...

கொலம்பியாவில் கனமழையால் அணை உடையும் அபாயம்

பொலிவியாவில் கவ்கா ((Cauca)) நதி மீது கட்டப்பட்டுள்ள அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் உடனடியாக தங்கள் இருப்பிடத்தை காலிசெய்யுமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஆண்டிகுவா ((Antioquia)) மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக...

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற சிறந்த படங்களில் ஷாப் லிப்டர்ஸ் முன்னிலை வகிக்கிறது. இதே பேல் பிளாக் லான்ஸ்மேன், கேப்ஹர்னாம் , இமேஜ் புக் , போன்ற படங்களும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. டாக்மேன் படத்தில் நடித்த மார்சிலோ சிறந்த...

பிரிட்டன் இளவரசர் ஹாரி - நடிகை மேகன் மார்க்லே திருமணம்..! லண்டன் மாநகரில் கோலாகலம் - புகைப்படங்கள்

பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை மணம் முடித்துக் கொண்டார். விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  வேல்ஸ் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகன் ஹாரியும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவும் நீண்ட...

ஹவாய் தீவில் மீண்டும் வெடித்த கிலாயூ எரிமலையால் நீடிக்கும் சிக்கல்

ஹவாய் தீவில் அமைந்துள்ள KILAUEA எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது. KILAUEA எரிமலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பால் நெருப்புக் குழம்பு  வெளியான நிலையில், இரவோடு இரவாக அப்பகுதியைவிட்டு வெளியேற்றப்பட்ட...