​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே?- மத்திய அரசுக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே?- மத்திய அரசுக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

தேசிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு காண்பிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், 50 கோடி பேருக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இதற்கான...

புதுச்சேரியில் பட்டா வழங்கக் கோரி ஆதார் அட்டையை திருப்பிக் கொடுத்த நரிக்குறவர்கள்

புதுச்சேரி மாநிலம் திருபுவனையில், பட்டா வழங்கக்கோரி ஆதார், ரேஷன் அட்டைகளை நரிக்குறவர்கள் திரும்ப ஒப்படைத்தனர். ஊரல்குட்டை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களில், சிலருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. இதனால், நிரந்தர இடம் கிடைக்காமல், குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக பலர் வேதனை...

வங்கிக் கடனை ஏய்த்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்புவதைத் தடுக்க புதிய சட்டம்

வங்கிக் கடன்களைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி என, வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு வெளிநாடு...

தாஜ்மஹாலை பார்வையிடுவது நீண்டகால கனவு : உபேர் CEO

தாஜ்மஹாலுக்கு வந்து பார்வையிடுவது தனது நீண்டகால கனவு என உபேர் கால்டாக்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரா கொஸ்ரோஷாஹி ((Dara Khosrowshahi)) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், மார்பிளால் ஆன நினைவிடம், தாம் காண விரும்பிய...

ஸ்ரீதேவியின் உடல்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இதனிடையே  நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டதாகவும், அதில் மாரடைப்பு காரணமாகவே ஸ்ரீதேவி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகலில் உடற்கூறு அறிக்கையும், தடயவியல் அறிக்கையும் துபாய் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதன் நகல் ஸ்ரீதேவியின்...

நிலவில் குகை போன்ற தங்குமிடங்களை அமைக்க இஸ்ரோ திட்டம்

நிலவில் எதிர்காலத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள, குகை போன்ற அமைப்பை ஏற்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ரோபோக்களையும், 3டி பிரிண்டர்கள் போன்ற கருவிகளையும் அனுப்பி, நிலவிலேயே குகை போன்ற தங்குமிடத்தை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 5 மாதிரிகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது....

இந்துக்கள் ஒன்றிணைந்தால்தான் தடைகளைத் தகர்த்திட முடியும்- RSS தலைவர் மோகன் பகவத்

இந்துக்கள் ஒன்றிணைந்தால்தான் தடைகளைத் தகர்த்திட முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பக்வத், இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக சதி நடப்பதாகத் கூறினார். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனவும்...

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை - சுப்பிரமணியன் சுவாமி

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய கல்வி நிறுவனம் என்பதால், அங்கு கணபதி பாடல் பாடியதில் தவறில்லை...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர ஜூன் 3ஆம் தேதி நுழைவுத் தேர்வு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான மாணவர்...

ஸ்ரீதேவி உடல் மும்பை வருவது மேலும் தாமதமாகும் என தகவல்

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவில் மும்பை வந்தடையும் என கூறப்படுகிறது.துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் கூராய்வு முடிந்த நிலையில், அதற்கான அறிக்கை தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று இரவே ஸ்ரீதேவி உடல் மும்பை...