​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட39 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட39 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க...

கேதார்நாத் கோயில் அருகே விமானப் படை ஹெலிகாப்டரில் தீவிபத்து - 4 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதர்நாத் கோவில் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படும் எம்ஐ 17 வி 5 என்ற ஹெலிகாப்டர் ஒன்று, தனக்கான தளத்தில் இறங்க முற்படும் போது அருகில்...

தெலுங்குதேசக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன் போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரித் தெலுங்கு தேசக் கட்சி எம்.பி. நாரமல்லி, இன்று நாட்டுப்புற கலைஞர் வேடத்தில் போராட்டத்தில் பங்கேற்றார். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்காததைக் கண்டித்துத் தெலுங்கு தேசக் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. மேலும்,...

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு வரும் 9ந் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்

காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனு ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களில்...

டெல்லியை அழித்து விடாதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லியை அழித்து விடாதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டடங்களுக்கு சீல் வைக்கும் விவகாரத்தால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் உச்சநீதிமன்றம் அவதானித்துள்ளது. அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால் மிகப்பெரிய பிரச்சினையாக இது விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும் நீதிபதிகள்...

திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ரூ. 4,000 கோடி வங்கியில் டெபாசிட்

திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ஆந்திராவில் இரு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.கே. சிங்கால் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பதி தேவஸ்தான பணத்தை பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம்...

வடமாநிலங்களில் வெடித்துள்ள போராட்டங்களால் ரயில்சேவை பாதிப்பு

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. எஸ்.சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் தலித்...

உருதுமொழி இந்தியாவின் ஒற்றுமையை உணர்த்துகிறது - மன்மோகன்சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஸ்வினி குமார் எழுதிய எஹசாஸ் ஓ இசார் என்ற உருது கவிதைகள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.  முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவில் கலந்துக் கொண்டு பேசிய...

தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் டெல்லி சென்றார் ஆளுநர் புரோஹித்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், விவசாய, வணிக அமைப்புக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன....

மார்ச் மாதத்தில் சரக்கு சேவை வரி 90ஆயிரம் கோடி ரூபாய் வரவு, முந்தைய ஆண்டைவிட 17% அதிகம் எனத் தகவல்

மார்ச் மாதத்தில் தொண்ணூறாயிரம் கோடி ரூபாய் சரக்கு சேவை வரியாகப் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறைச் செயலர் ஹாஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறித்த இலக்கையும் தாண்டி மார்ச் மாதத்தில் தொண்ணூறாயிரம் கோடி ரூபாய் சரக்கு சேவை வரியாகப் பெறப்பட்டுள்ளதாகத்...