​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெறுள்ள இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, பெய்ஜிங் நகரில் நடைபெற்று...

ஓடும் காரில் திடீரென பற்றி எரிந்த நெருப்பு

ஐதராபாத்தில் ஓடும் கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார். ராஜேந்தர் நகர் பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த காருக்குள் திடீரென புகை வந்ததை ஓட்டுநர் கவனித்துள்ளார். தொடர்ந்து கடும் வெப்பம் ஏற்பட்டதால் சந்தேகமுற்ற அவர் வெளியே வந்துள்ளார். இந்த இடைவெளியில்,...

நீதிபதிகள் குறைகளைக் கேட்டறிய 4 பேர் கொண்ட குழு அமைப்பு

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குறைகளைத் தீர்க்க 4 பேர் கொண்ட குழுவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நியமித்துள்ளார். தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியினரின் நோட்டீஸை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நிராகரித்தார். இதனையடுத்த சிறிது நேரத்தில், உச்சநீதிமன்ற...

இந்திய எல்லைப்படையை கேலி செய்த பாகிஸ்தான் வீரர் ஹாசன் அலியின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

இந்திய எல்லை பாதுகாப்பு படையினரை கேலி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன. அந்நாட்டின் கிரிக்கெட் வீரரான ஹாசன் அலி, வாகா எல்லையில் நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்திய எல்லை படையினரை கேலி செய்வது...

உத்தரபிரதேச ஏ.டி.எம்.களில் போலி ரூபாய் நோட்டு

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில்  அசோக் குமார் பட்னாயக் என்பவர் பணம் எடுக்கச் சென்றார். 4500...

மாநிலங்கள் GST செலுத்த தனி வாலட் - மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு, எளிதாக  பெற ஏதுவாக, wallet போன்ற வசதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரியினங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இவ்வசதி அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த...

குளிர்சாதனப்பெட்டிகளில் 24 முதல் 28 டிகிரி வரையிலான வெப்ப நிலை டெங்கு கொசுக்கள் வளர வகைசெய்கிறது - வல்லுநர்கள் எச்சரிக்கை

குளிர்சாதனப்பெட்டிகளில் 24 முதல் 28 டிகிரி வரையிலான வெப்ப நிலை டெங்கு கொசுக்கள் வளர வகை செய்வதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கால நிலை மாற்றம் மற்றும் பரவும் நோய்கள் ஆய்வு மைய ஆலோசகர் டாக்டர்...

அசாம் மாநிலத்தில் சிறப்பு காவல் படையினர் பணி வரன்முறை செய்யக் கோரி போராட்டம்

அசாம் மாநில காவல்படை சிறப்பு பிரிவு போலீசார், பணி வரன்முறை செய்யக் கோரி தற்கொலை முயற்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தின் கவுகாத்தி நகரை அடுத்த சாராய் காட் பாலத்தில் திரண்ட சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 270 பேர் மறியல் போராட்டத்தில்...

மது அருந்திவிட்டு சொகுசுக் காரை பிளாட்பாரத்தின் மீது ஏற்றியதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் பி.டெக் மாணவர் மது அருந்திவிட்டு ஓட்டிய சொகுசுக் கார் பிளாட்பாரத்தின் மீது ஏறியதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளி உயிரிழந்தார். குஷைகுடா ((Kushaiguda)) என்ற இடத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான அசோக் தனது மகனுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு...

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் - மத்திய அரசு

மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) மத்திய அரசு விலக்கி கொண்டது. அதேபோல், அருணாச்சல பிரதேச மாநிலத்தில், 10 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், இச்சட்டம் விலக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து...