​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேஸ்புக்கில் நண்பனின் காதலி, தாய் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட சிறுவனுக்கு அடி உதை

பேஸ்புக்கில் நண்பனின் காதலி, தாய் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட சிறுவனுக்கு அடி உதை

ஆந்திராவில் பேஸ்புக்கில் நண்பனின் காதலி மற்றும் தாய் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட சிறுவன் அடித்து உதைக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆந்திராவில் ஒரு சிறுவனை, பல சிறுவர்கள் மொய்த்துக் கொண்டு...

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் படிந்துள்ள பனிப்பாளங்களை அகற்றும் பணிகள்

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் படிந்துள்ள பனிப்பாளங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் கடும்பனிப் பொழிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடப்பட்டுள்ளது. சாலையின் ஒரு இடத்தில் பனிச்சரிவும் ஏற்பட்டது. ஆங்காங்கே பனிப்பாளங்களுக்கு மத்தியில்...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 9 சிலீப்பர் செல்கள் கைது

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 9 பேரை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் போலீசார் கைது செய்துள்ளனர். குடியரசு தினம் வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள், சிலீப்பர் செல்களாக...

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த நபர் தப்பியோட்டம்

புதுச்சேரியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தமது நண்பர் கார்த்திக் என்பவருடன் லாஸ்பேட்டையில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது...

இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளது - ரகுராம் ராஜன்

சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருவதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பேசிய ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு...

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ்ஆப் வேலை செய்யாததால், பயன்பாட்டாளர்கள் அவதி

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ்ஆப் வேலை செய்யாததால், பயன்பாட்டாளர்கள் அவதி அடைந்தனர். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் முக்கியமான தகவல் பரிமாற்ற செயலியாக விளங்கும்...

கர்நாடகாவில் சக எம்எல்ஏவை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்

கர்நாடகாவில் சக எம்எல்ஏவை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

இமயமலை பயணம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது - பிரதமர் மோடி

தனது இளமை காலம் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். பேஸ்புக்கின் பிரபல பேஜ்ஜான Humans of Bombay உடன் பிரதமர் மோடி தனது இளமைகால வாழ்க்கை உள்ளிட்டவை...

புதுச்சேரியில் பிப்ரவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு - நாராயணசாமி

புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறியுள்ளார்.  ...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பு

டெல்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குழந்தை...