​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைச்சர் மணிகண்டன் பேச்சுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்

அமைச்சர் மணிகண்டன் பேச்சுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் அணியினர் கட்டும் அ.தி.மு.க கரைவேட்டியை உருவும்படி அமைச்சர் மணிகண்டன் பேசியதற்கு தினகரன் பதில் அளித்துள்ளார்....

தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பிற மாநிலங்களில் தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சண்டிகர் மருத்துவக் கல்லூரியில் ராமேஸ்வரம் மாணவர் கிருஷ்ணபிரசாத் தற்கொலையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ரேகிங், இன -...

கமலிடமிருந்து டிசைனராக பணியாற்றியதற்கு கணிசமான சம்பள பாக்கி வரவேண்டியுள்ளது: கவுதமி

ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த வகையில், கமல்ஹாசனிடம் இருந்து சம்பள பாக்கி வரவேண்டியிருப்பதாக தான் கூறியதற்கு ஆதாரமிருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்கியதை அடுத்து, அவருக்கு ஆதரவாக, இணைந்து செயல்படக்கூடும் என வெளியான ஊகங்களை நடிகை கவுதமி...

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இலவச பசு மாடு வழங்கும் திட்டம்- உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஏழை, எளியோருக்கு இலவச பசு மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவிக்கு ஒப்புதல் பெற இருப்பதாக கால்நடை பராமாரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடுமலை அருகே புக்குளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டும்...

IIT-யில் கணபதி துதி பாடியதை கண்டிப்பவர்களுக்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டிக்காமல், ஐஐடி-யில் கணபதி துதி பாடியதைக் கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே தினகரன் முதல்வராக முயன்றார்: தங்கமணி

கடந்த 2008ம் ஆண்டு ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே முதலமைச்சராக ஆசைப்பட்டவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தருமபுரியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவிடம் 33 ஆண்டுகளாக உடனிருந்தவர்களுக்கு ஏன் கட்சியில் எந்த பதவியும் வழங்கவில்லை...

மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று தேர்தல்

மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில்  சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜொனாதன் சங்மா பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல்...

இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பினர் முடக்கப் பார்த்தனர்- CV சண்முகம்

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்காது என்றால் அதை முடக்கிவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பினர் கூறியதாக அமைச்சர் சிவி. சண்முகம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், டிடிவி தினகரனை கடுமையாக சாடினார். ...

திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் கால்பந்து வீரர் பூட்டியா விலகினார்

திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பைச்சங் பூட்டியா ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கால்பந்து வீரரான பைச்சங் பூட்டியா 2013-ஆம் ஆண்டு திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 மக்களவைத் தொகுதியில் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர்...

மாணவர்களுக்கான புதிய ஹெல்ப்லைன் எண்ணை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்- செங்கோட்டையன்

மாணவர்களுக்கான 14417 என்ற புதிய ஹெல்ப்லைன் எண்ணை முதலமைச்சர் விரைவில் தொடங்கிவைக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தங்கள் மன அழுத்தங்களுக்கு தீர்வு காணவும், புதிய பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், எந்தெந்தப் பாடத்திட்டம் எந்தக்...