விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய வரும் மே 4ந் தேதி வரை தடை

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்யப்படுவதால் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து, விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அங்கீகாரமில்லாத நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-க்கு முந்தைய பத்திரப் பதிவுகளை மறு பத்திரப்பதிவுக்கு அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிக்கைக்கு கடந்த மாதம் அனுமதி அளித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், எனினும் இது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்தது. இன்றைய விசாரணையின்போது அங்கீகாரமற்ற நிலங்களை பத்திரப் பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தடை விதிக்குமாறு யானை ராஜேந்திரன் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய மீண்டும் இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை மே 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்தத் தடையால் பாதிக்கப்படுவது பெரிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் தானே தவிர ஏழைகள் அல்ல என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்

10 total views, 1 views today

One Response to விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய வரும் மே 4ந் தேதி வரை தடை

  1. arun says:

    Sorry judge really public only who bought the land mostly affected on your judgement.The government preparing statement for selling the future plot and layout.why you banned for sold land.if government delaying to pass the statement give punishment to them not for innocent public.what mistake is our side pls don’t punish Innocent public.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *