வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம்-ஜோங்-நம் மரணத்தில் சந்தேகம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நம்மின் உடலை ஒப்படைக்க மலேசிய காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. கிம் ஜோங் நம் மலேசியா விமான நிலையத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டி இருப்பதால், இதில் சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உள்பட மூன்று பேரை மலேசிய காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே, கிம் ஜோங் நம்-மின் உடலை ஒப்படைக்க வேண்டுமானால், கிம் குடும்பத்தின் டிஎன்ஏ மாதிரி வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சடலத்தை மலேசிய காவல்துறை விடுவிக்காது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

6 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *