முலாயம் சிங் யாதவ் ரூ. 4 லட்சம் மின்கட்டணப் பாக்கி

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் 4 லட்சம் ரூபாய் மின்கட்டணப் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ள்ளது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு சலுகை அளிக்கும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் ஒருபகுதியாக முலாயம் சிங் யாதவ் வீட்டில் மின்சாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் 4 லட்சம் ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. முலாயம் சிங் வீட்டில் அனுமதிக்கப்பட்ட அளவான 5 கிலோவாட் என்ற வரம்பு 8 முறை மீறப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 4 லட்சம் ரூபாயைக் கட்ட அவருக்கு இந்த மாத இறுதிவரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.

6 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *