பாகிஸ்தான் சூஃபி வழிபாட்டுத் தலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு-100க்கும் மேற்பட்டோர் பலி.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் சூஃபி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் 250 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் என்ற சூஃபி வழிபாட்டுத் தலத்தில் வியாழன்தோறும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்றும் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது வாசல் அருகே உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி வந்த தீவிரவாதி ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்தான்.பயங்கர ஓசையுடன் குண்டு வெடித்ததில் அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் சிதறி ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.தீவிரவாதி தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன் மக்கள் கூட்டத்தில் வீசிய குண்டுகள் வெடித்திருந்தால் உயிர்ச்சேதம் பலமடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *